குறித்துரைக்கப்பட்ட வியாபார தொழில்முயற்சிகளின் கடமைகள்

ஒவ்வொரு குறித்துரைக்கப்பட்ட வியாபார தொழில்முயற்சியும் பின்வருவனவற்றை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன.
  1. இலங்கைக் கணக்கீட்டுத் தராதரங்களுடன் இயைந்ததாக அதன் நிதிசார் கூற்றுக்களை தயாரித்து அத்தகைய தொழில்முயற்சசியின் நிதிசார் செயலாற்றுகை மற்றும் நிதிசார் நிலைமை குறித்த உண்மையானதும் நியாயமானதுமான கருத்தொன்றை முன்வைக்கும் நோக்குடன் இலங்கைக் கணக்காய்வுத் தராதரங்களுடன் இயைந்ததாக அதன் நிதிசார் கூற்றுக்கள் கணக்காய்வு செய்யப்பட்டதை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தல்.
  2. இலங்கை பட்டய கணக்காளர்கள் நிறுவகத்தினால் வழங்கப்பட்ட சான்றிதழை கொண்ட அதன் அங்கத்தவர்களினால் நிதிசார்கூற்றுக்கள் கணக்காய்வு செய்யப்பட்டதாக இருத்தல்.
  3. இலங்கைக் கணக்கீட்டுத் தராதரங்களுக்கு இயைந்ததாக நிதிசார் கூற்றுக்க்ள் தயாரிக்கப்பட்டிருக்கின்றவா என்பதை சபை தீர்மானிப்பதற்கு இயலச்செய்யும் வகையில் இலங்கைக் கணக்கீட்டுத் தராதரங்கள் மற்றும் இலங்கைக் கணக்காய்வுத் தராதரங்கள் கண்காணிப்புச் சபைக்கு தொழில்முயற்சியின் கணக்காய்வுசெய்யப்பட்ட வருடாந்த நிதிசார் கூற்றுக்களை சமர்ப்பித்தல் அத்துடன்
  4. சபையினால் அல்லது அதனால் அதிகாரமளிக்கப்பட்ட ஆளினால் வழங்கப்பட்ட அறிவித்தலொன்றின் மூலம் குறிப்பிடப்பட்ட அத்தகைய நேரத்தினுள் சபையினால் அல்லது சபையினால் அதிகாரமளிக்கப்பட்ட எவரேனும் ஆளினால் தேவைப்படக்கூடியவாறான அதன் நிதிசார் அறிக்கைகளுடன் தொடர்புடைய ஏதாவது தகவல் சபையினால் அதிகாரமளிக்கப்பட்ட எவரேனும் ஆளிற்கு அல்லது சபைக்கு வழங்குதல்.
    • ஒவ்வொரு குறித்துரைக்கப்பட்ட வியாபார தொழில்முயற்சியும் கீழே குறிப்பிடப்பட்ட முகவரிக்கு ஆண்டறிக்கையின் இரண்டு பிரதிகளை சமர்ப்பிக்கும்படி தேவைப்படுத்தப்படுவதோடு அதற்கான பற்றுச்சீட்டையும் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்.பணிப்பாளர் நாயகம், இலங்கைக் கணக்கீட்டுத் தராதரங்கள் மற்றும் இலங்கைக் கணக்காய்வுத் தராதரங்கள் கண்காணிப்புச் சபை , 3ஆவது மாடி, 293 காலி வீதி, கொழும்பு 03. தொ.பே: +94 11 2301 210 தொலைநகல்: +94 11 2301 211 மின்னஞ்சல்: slaasmb@sltnet.lk

பணிப்பாளர்கள், முகாமையாளர்கள், செயலாளர்கள் மற்றும் ஏனைய அலுவலர்களின் கடமைகள்

அனைத்து பணிப்பாளர்கள், முகாமையாளர்கள், செயலாளர்கள் மற்றும் கம்பனியொன்றின் அல்லது அரச கூட்டுத்தாபனமொன்றின் மற்றும் அதை ஒத்த அலுவலர்கள் ஆகியோரின் கடமை யாதெனில் சட்டத்தின் கீழ் குற்றமொன்றின் ஆரம்பத்தை தடுப்பதற்கு அத்தகைய எல்லா கவனங்களையும் பிரயோகிப்பதோடு அவர்/ அவள் விடயத்தின் தொழிற்பாடுகள் மற்றும் நிலைமைகளின் தன்மைக்கு ஏற்ப அதை பிரயோகிப்பதாகும். மேலதிக விபரங்களுக்கு “தண்டனைகளும் ஏனைய விளைவுகளும்” தொடர்பான பந்தியை பார்க்க.

தொடர்புடைய இணைப்புகள்

 
 

Latest Findings

எம்மைத் தொடர்புகொள்ள

இலங்கைக் கணக்கீட்டு மற்றும் கணக்காய்வுத் தராதரங்கள் கண்காணிப்புச் சபை
293 காலி வீதி, கொழும்பு 3, இலங்கை
94-1-2301210
94-1-2301211

Solution by: LankaCom