இச் சட்டத்தின் தேவைப்பாடுகளின் நோக்கத்திற்காக இலங்கைக் கணக்கீட்டுத் தராதரங்கள் மற்றும் இலங்கைக் கணக்காய்வுத் தராதரங்கள் ஆகியன இலங்கை பட்டய கணக்காளர்கள் நிறுவகத்தினால் அங்கீகரிக்கப்பட்டு இதன் பின்னரான திருத்தங்களுக்கு உட்பட்டு 1998 ஆம்ஆண்டின் திசெம்பர் 2ஆம்திகதிய 1056/19ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. இந்த தராதரங்கள் 1999 சனவரி 01 ஆந் திகதியன்று அல்லது அதன் பின்னர் ஆரம்பிக்கின்ற காலப்பகுதியை உள்ளடக்கிய நிதிசார் அறிக்கைகளுக்கு நடைமுறைப்படுத்தப்படும். சட்டத்தின் கீழ், அதனால் அங்கீகரிக்ககப்பட்ட தராதரங்களை நிறுவனம் மீளாய்வுசெய்யலாம், மாற்றலாம் அல்லது திருத்தலாம், அத்தகைய மீளாய்வுசெய்யப்பட்ட, மாற்றப்பட்ட அல்லது திருத்தப்பட்ட தராதரங்கள் வர்த்தமானியில் வெளியிடப்படும். அத்தகைய மீளாய்வுகள், மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் வௌயீட்டுத் திகதியின் பின்னர் அல்லது அதனகத்து குறிப்பீடுசெய்யப்படுகின்றதான அத்தகைய பின்னரான திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும்.

தொடர்புடைய இணைப்புகள்

 
 

Latest Findings

எம்மைத் தொடர்புகொள்ள

இலங்கைக் கணக்கீட்டு மற்றும் கணக்காய்வுத் தராதரங்கள் கண்காணிப்புச் சபை
293 காலி வீதி, கொழும்பு 3, இலங்கை
94-1-2301210
94-1-2301211

Solution by: LankaCom