1995 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சட்டமும் அதன் கீழ் ஆக்கப்பட்ட ஒழுங்குவிதிகளும் சில தொழில்முயற்சிகள் குறித்துரைக்கப்பட்ட தொழில்முயற்சிகளாக இருத்தல் வேண்டும் என வரைவிலக்கணம் செய்கின்றன.
1999 ஆம் ஆண்டு சனவரி 1 ஆம் திகதிக்குப் பின் ஆரம்பிக்கின்ற காலப்பிரிவு தொடர்பாக இந்த தொழில்முயற்சிகளின் நிதிசார் கூற்றுகளின் கணக்காய்வின் தயாரிப்பு மற்றும் சமர்ப்பிப்புடன் பிரதானமாக பிரயோகிக்கப்படுகின்றது.
இந்த சட்டமானது குறித்துரைக்கப்பட்ட வியாபார தொழில்முயற்சிகள் தொடர்பிலும் அவற்றின் பணிப்பாளர்கள், அலுவலர்கள் மற்றும் கணக்காய்வாளர்கள் தொடர்பிலும் சில கடமைகளையும் கடப்பாடுகளையும் விதிப்பதோடு அதை செய்யத்தவறுவோர் மீது பல்வேறு தண்டனைகளையும் 5 வருடங்களுக்கு விஞ்சாத சிறைவாசம் வரையிலான தண்டணைக்கும் இட்டுச்செல்லலாம்.