ஒவ்வொரு குறித்துரைக்கப்பட்ட வியாபார தொழில்முயற்சியினதும் நிதிசார் கூற்றுக்ககள் இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவகத்தின் கணக்காளராக செயற்படுவதற்கு நிறுவகத்தினால் வழங்கப்பட்ட சான்றிதழைக் கொண்ட அங்கத்தவர் ஒருவரினால் கணக்காய்வு செய்யப்பபடவேண்டும்.
நிதிசார் கூற்றுக்கள் இலங்கைக் கணக்கீட்டுத் தராதரங்களுக்கு அமைவாக தயாரிக்கப்பட்டு, சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது என்பதையும் கணக்காய்வானது இலங்கைக் கணக்காய்வுத் தராதரங்களுக்கு அமைவாக நடத்தப்பட்டடிருக்கின்றது என்பதையும் தமது கணக்காய்வு அறிக்கையில் கணக்ககாய்வாளர்கள் சன்றுப்படுத்தவேண்டும் என சட்டம்தேவைப்படுத்துகின்றது.