இலங்கைக் கணக்கீட்டு மற்றும் கணக்காய்வுத் தராதரங்கள் கண்காணிப்புச் சபையானது 1995 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க இலங்கைக் கணக்கீட்டு மற்றும் கணக்காய்வுத் தராதரங்கள் சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டதாகும். சட்டமானது சில தொழில்முயற்சிகளை குறித்துரைக்கப்பட்ட வியாபார தொழில்முயற்சிகளாக அடையாளங்கண்டுள்ளது. இவை கண்காணிப்பு நோக்கத்திற்கு முக்கியமாக இருக்கின்ற வியாபாரங்களை மேற்கொள்கின்ற கம்பனிகளான அனைத்து பெயரிடப்பட்ட கம்பனிகள் ( வங்கித்தொழில், நிதி, காப்புறுதி மற்றும் குத்தகை போன்றவை) , ஏனைய பெரிய கம்பனிகள் (தனியார் மற்றும் அரசாங்க) அரச கூட்டுத்தாபனங்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்குகின்றன. அனைத்து குறித்துரைக்கப்பட்ட வியாபார தொழில்முயற்சிகளும் இலங்கை கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு தராதரங்கள் கண்காணிப்பு சபைக்கு தமது கணக்காய்வு செய்யப்பட்ட வருடாந்த நிதிசார் கூற்றுக்களை அனுப்புதல் வேண்டும். இ.க.க.த.க.ச. அதன் தொழிற்பாடுகளை மேற்கொள்ளும் நோக்கத்திற்காக பணிப்பாளர்கள், முகாமையாளர்கள் மற்றும் கணக்காய்வாளர்களிடமிருந்து ஆவணங்களையும் தகவல்களையும் விளக்கங்களையும் கோருவதற்கு அதிகாரமளிக்கப்பட்டிருக்கின்றது. இலங்கை கணக்கீட்டு தராதரங்களுக்கு அமைவாக நிதிசார் கூற்றறிக்கைகள் தயாரிக்கப்பட்டிருக்காதவிடத்து, இ.க.க.த.க. ச. பொருத்தமான திருத்தங்களை செய்வதற்கு தொழில்முயற்சியொன்றை கோரலாம். சபையானது ஆகக்கூடிய தண்டப்பணத்தின் 1/3 மேற்படாத பணத்தொகையொன்றுக்கான குற்றமொன்றுக்கு திரட்டலுக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளது. பொதுமக்களை வேண்டுமென்றே தவறாக இட்டுச்செல்வதற்கு இயைபாடற்ற விடயங்களைப்பொறுத்தவரையில் நீதிமன்றம் 5 வருடங்களுக்கு விஞ்சாத சிறைவாசத்தை தண்டணையாக விதிக்க முடியும்.
சபையின் தொழிற்பாடு
குறித்துரைக்கப்பட்ட வியாபார தொழில்முயற்சிகளின் நிதிசார் கூற்றுகளின் கணக்காய்வின் தயாரிப்பு மற்றும் சமர்ப்பிப்புக்கள் இலங்கைக் கணக்கீட்டுத் தராதரங்கள் மற்றும் இலங்கை கணக்காய்வு தராதரங்களுடன் இயைந்து செல்வதை கண்காணித்தல்.