சட்டத்தின் தேவைப்பாடுகளுடன் இயைந்துசெல்ல தவறுகின்ற ஒவ்வொரு நபரும் இச்சட்டத்தின் கீழ் குற்றமொன்றுக்கு தவறாளியாதல் வேண்டும் என்பதோடு நீதவான் நீதிபதி ஒருவரின் முன்னர் சுருக்க விசாரணையொன்றின் பின்னரான குற்றத்தீர்ப்பின் அடிப்படையில் ரூபா ஐநூறு ஆயிரத்திற்கு விஞ்சாத தண்டப் பணத்தொகையொன்றுக்கு பொறுப்பாதலும் வேண்டும்.
இச்சட்டத்தின் கீழ், குற்றமொன்றின் அடிப்படையில் குற்றத்தீர்ப்பளிக்கப்பட்டு நபரொருவர், அத்தகைய குற்றமானது குறித்துரைக்கப்பட்ட வியாபார தொழில்முயற்சியின் பங்குதாரர்களை அல்லது அத்தகைய குறித்துரைக்கப்பட்ட வியாபார தொழில்முயற்சியுடன் ஈடுபட்டுள்ள ஏதாவது நிதி நிறுவனத்தை அல்லது உண்ணாட்டு இறைவரி திணைக்களத்தை தவறாக வழிநடத்தும் நோக்குடன் குற்றம் செய்யப்பட்டிருப்பதாக நீதிமன்றம் சட்டத்தை அளாவியதாக நிலைப்பாட்டைக்கொண்டு அல்லது இந்த சட்டத்தின் கீழ் குற்றமொன்றை அதிகாரமளிக்கப்பட்ட வர்த்தக வங்கியொன்று செய்ததாக குற்றத் தீர்ப்பளிக்கப்பட்டால் அத்தகைய வங்கியின் வைப்பாளர்களை தவறாக வழிநடத்தும் நோக்குடன் குற்றம் செய்யப்பட்டிருப்பதாக நீதிமன்றம் சட்டத்தை அளாவியதாக நிலைப்பாட்டைக்கொண்டு குற்றவாளிக்கு நீதிமன்றம் ஐந்து வருடங்களுக்கு விஞ்சாத சிறைவாசத்தை தண்டணையாக வழங்கலாம்.
இச்சட்டத்தின் கீழ், குற்றமொன்றை கூட்டாண்மை அமைப்பு, குற்றத்தின் ஆரம்ப நேரத்தில் உள்ள எவராவது நபர், ஒரு பணிப்பாளர், முகாமையாளர், செயலாளர் அத்தகைய கூட்டாண்மை அமைப்பின் ஏனைய ஒத்த அலுவலர் செய்திருக்குமிடத்து அத்தகைய குற்றம் அவர் அறியாது அல்லது ஈடுபாடின்றி செய்யப்பட்டது அல்லது விடயத்தின் எல்லா நிலைமைகளிலும் தனது தொழிற்பாடுகளின் தன்மையொடு தொடர்பானதாக தான் நிறைவேற்றவேண்டுமென்ற குற்றத்தின் ஆரம்பத்தை தடுப்பதற்கான அத்தகைய எல்லா கவனத்தையும் பிரயோகித்தார் என்பதை அவர் நிரூபிக்காவிடில் தவறாளியாகக் கருதப்படுவார்.
இச் சட்டத்தின் எந்தவொரு ஏற்பாட்டையும் மீறுகின்ற எந்தவொரு குறித்துரைக்கப்பட்ட வியாபார தொழில்முயற்சியினதும் எந்தவொரு கணக்காளருக்கும் அத்தகைய கணக்காளருக்கு எதிராக பொருத்தமான நடவடிக்கை எடுப்பதற்கு சபையினை இயலச்செய்வதன் நோக்கத்திற்காக, உறுப்பினர் ஒருவராக இருக்கின்ற அத்தகைய கணக்காளரின் ஏதாவதொரு தொழில்சார் அமைப்பொன்றின் கவனத்திற்கு அத்தகைய மீறுகையை கொண்டுவருவது சபையின் கடமையாக இருக்கும்.
இந்த சட்டத்தின் ஏற்பாடுகளுடன் இயைந்து செயற்படத் தவறிய எந்தவொரு குறித்துரைக்கப்பட்ட வியாபார தொழில்முயற்சி பற்றியும் அத்தகைய விடயத்தை பின்வருவோரின் கவனத்திற்கு கொண்டுவருவது சபையின் கடமையாகும்.
அத்தகைய குறித்துரைக்கப்பட்ட வியாபார தொழில்முயற்சியின் செயற்பாடுகளை ஒழுங்குறுத்த அல்லது மேற்பார்வைசெய்வதற்கு சட்டத்தினால் அதிகாரமளிக்கப்பட்டுள்ள ஏதாவது அதிகாரசபைக்கு அத்துடன்
அத்தகைய குறித்துரைக்கப்பட்ட வியாபார தொழில்முயற்சியின் அத்தகைய இயைபின்மை வரி பொறுப்புகளில் கணிசமான குறைப்பொன்றை ஏற்படுத்துமென சபை கருதினால் உண்ணாட்டு இறைவரி திணைக்களத்திற்கு