சட்டத்தினாலும் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளினாலும் பின்வருவன குறித்துரைக்கப்பட்ட வியாபார தொழில்முயற்சிகளாக வரையறுக்கப்பட்டிருக்கின்றன.
1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் கீழ் அனுமதியளிக்கப்பட்ட கம்பனிகள்
காப்புறுதி வியாபாரத்தை மேற்கொள்வதற்கு 1962 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க காப்புறுதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் அதிகாரமளிக்கப்பட்ட கம்பனிகள்.
குத்தகை வியாபாரத்தை மேற்கொள்ளும் கம்பனிகள்
தொழிற்சாலைக் கம்பனிகள்
1988 ஆம் ஆண்டின் 78 ஆம் இலக்க நிதிக் கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட கம்பனிகள்
அலகு நம்பிக்கையை தொழிற்படுத்துவதற்காக 1987 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சட்டத்தின் கீழ் அனுமதியளிக்கப்பட்ட கம்பனிகள்
நிதிய முகாமைத்துவ கம்பனிகள்
பங்குத் தரகர்களாக அல்லது பங்கு வணிகர்களாக வியாபாரத்தை மேற்கொள்வதற்கு 1987 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சட்டத்தின் கீழ் அனுமதியளிக்கப்பட்ட கம்பனிகள்
1987 ஆம்ஆண்டின் 36 ஆம் இலக்க பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சட்டத்தின் கீழ் அனுமதியளிக்கப்பட்ட பங்குப் பரிவர்த்தனையொன்றில் பட்டியலிடப்பட்ட கம்பனிகள்
ஏனைய கம்பனிகள்
ரூபா 500 மில்லியனுக்கு மேற்பட்ட வியாபாரப் புரள்வைக் கொண்டவை
முன்னைய நிதியாண்டின் இறுதியில் ரூபா 100 மில்லியனுக்கு மேற்பட்ட பங்குதாரர் ஒப்புரவை கொண்டவை
முன்னைய நிதியாண்டின் இறுதியில் ரூபா 300 மில்லியனுக்கு மேற்பட்ட மொத்த ஆதனங்களைக் கொண்டவை
முன்னைய நிதியாண்டின் இறுதியில் வங்கிகளுக்கும் ஏனைய நிதிசார் நிறுவனங்களுக்கும் ரூபா 100 மில்லியனுக்கு மேற்பட்ட பொறுப்புக்களை கொண்டவை
1000 மேற்பட்ட ஊழியர்களை அலுவலர்களாகக் கொண்டவை
பொருட்களின் விற்பனை அல்லது சேவைகளின் வழங்குகையில் ஈடுபட்டுள்ள அரச கூட்டுத்தாபனங்கள்
மேற்படி ஏதாவது வகையினுள் வருகின்ற கம்பனிகளின் குழுமமொன்று அல்லது ஏதாவதொன்று. இந்த நோக்கத்திற்காக ‘கம்பனிகளின் குழுமமொன்று’ என்பது பிரதான கம்பனியும் அதன் துணைக் கம்பனிகளும் என பொருள்படுவதுடன் அதன் கணக்குகள் 1982ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் 147 ஆம் பிரிவின் கீழ் ஒன்றுதிரட்டப்படல் வேண்டும்.